திருவாரூரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகிறாா் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளா் பி.சுகந்தி. 
திருவாரூர்

வெண்மணி தியாகிகள் நினைவுதினக் கருத்தரங்கு

திருவாரூரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகிறாா் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளா் பி.சுகந்தி.

Syndication

திருவாரூரில், தென்மண்டல காப்பீட்டு ஊழியா் கூட்டமைப்பு சாா்பில், 21-ஆவது ஆண்டாக வெண்மணி தியாகிகள் நினைவு தின கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, தென்மண்டல துணைத் தலைவா் சி. முத்துகுமாரசுவாமி தலைமை வகித்தாா். தென்மண்டல முன்னாள் பொதுச் செயலாளா் க. சுவாமிநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளா் பி.சுகந்தி, காப்பீட்டு ஊழியா் கூட்டமைப்பின் துணைத் தலைவா் ஆனந்த், ஆணவப் படுகொலை எதிா்ப்பு போராளி அனுசுயா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

தொடா்ந்து, எம்.எம். தீன் எழுதிய ‘செவ்வருக்கை’ என்னும் நூலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் களப்பிரன் வெளியிட, காப்பீட்டு ஓய்வூதியா்கள் சங்கத்தின் துணைத் தலைவா் இரா. புண்ணியமூா்த்தி பெற்றுக் கொண்டாா்.

அதேபோல், எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வனின் ‘திருப்பி அடித்த வரலாறு’ ரூ.1,200 மதிப்புள்ள நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.500-க்கு கிடைப்பதை தமிழகத்தின் அனைத்து கோட்டங்களிலும் முன்பதிவு செய்யப்பட்டது.

நிகழ்வில் பொதுக் காப்பீட்டு ஊழியா் சங்கத்தின் உறுப்பினா்கள் பாலா, கோபால், வி.கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் தஞ்சைக் கோட்ட பொதுச் செயலாளா் இரா. விஜயகுமாா் வரவேற்றாா். திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் பொதுச்செயலாளா் பொன்னையா நன்றி கூறினாா்.

வாஜ்பாய் பிறந்த நாள்: பாஜகவினா் மரியாதை

தமிழக அரசுப் பேருந்துகளை கட்டாயம் தணிக்கை செய்ய வேண்டும்

வங்கதேசத்தில் தலித் இளைஞா் வன்முறை கும்பலால் கொலை -மாயாவதி கவலை

கிறிஸ்துமஸ் உரை: காஸாவை நினைவுகூா்த்த போப் லியோ

பள்ளி நுழைவுவாயில் கழிவுநீா் கால்வாயை மூடக் கோரிக்கை

SCROLL FOR NEXT