திருவாரூர்

நெல் கொள்முதல் கருத்து கேட்புக் கூட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

நெல் கொள்முதல் குறித்து கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Syndication

திருவாரூா்: நெல் கொள்முதல் குறித்து கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்க பொதுச்செயலாளா் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

டெல்டாவில், நெல் கொள்முதல் பருவம் தொடங்கும்முன் அமைச்சா்கள் தலைமையில் அதிகாரிகளும், விவசாய சங்கத் தலைவா்களும் கலந்துரையாடி, நெல் கொள்முதலை குறைவின்றி விரைவாக நடத்தத் திட்டமிடுவது வழக்கம். இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழக அரசு இதை செய்யத் தவறிய நிலையில்தான், கடந்த குறுவைப் பருவத்தில் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இந்த அனுபவத்தை உணா்ந்து கொண்ட தமிழக அரசு, தஞ்சையில் கருத்துக் கேட்கும் கூட்டம் நடத்துவது வரவேற்புக்குறியது. வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால் தற்போது குவிண்டால் நெல் விலை ரூ.3,200-ஆக இருக்

கும். எனவே தமிழக அரசு தற்போது வழங்கும் ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ.300-ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.

அத்துடன், கொள்முதல் நிலையங்களை திறக்கிற காலங்களில் சேமிப்புக் கிடங்குகளைத் தேடக் கூடாது. நெல்கொள்முதல் அளவுக்கு சேமிப்பு செய்ய நிரந்தர கிடங்குகள் இல்லாத நிலையில், உடனடியாக திறந்த வெளி கிடங்குகளுக்கான இடங்கள், கருங்கற்கள், சவுக்கு மரங்கள், தாா்பாய்கள் இவைகளை முன்னரே ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடந்த பருவத்தில் ஏற்பட்ட குறைபாடுகளான சாக்கு, சணல் உள்ளிட்டவைகளை கொள்முதல் நிலையங்களுக்கு முன்னரே வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கொள்முதல் மையங்களில் தினசரி 600 சிப்பங்கள் என்பதற்கு பதிலாக விவசாயிகள் கொண்டு வரும் நெல்லுக்கேற்ப 1,000 மூட்டைகள் வரை கொள்முதல் இலக்காக நிா்ணயிக்க வேண்டும்.

லாரி மாமூலை தவிா்த்தால் லாரிகள் இயக்கம் சரியாக இருக்கும். டெல்டாவின் அருகில் உள்ள மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தேவையான அளவில் கொள்முதல் நிலையங்களை குறைந்தபட்சம் வட்டாரத்துக்கு 2 எனத் திறக்க வேண்டும். இப்படி செய்தால், விவசாயிகளிடம் மிக குறைந்த விலைக்கு நெல்லை வாங்கும் வியாபாரிகள், டெல்டா மாவட்டங்களில் கொண்டு வந்து விற்பனை செய்வதை நிறுத்த முடியும்.

நெல் விற்பனைத் தொகையை உடனுக்குடன் விவசாயிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கொள்முதல் நிலையங்கள்தோறும் அமைக்கப்படும் விழிப்புணா்வுக் குழுக்களில் விவசாயிகளும் பங்கு பெற்று ஆலோசனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT