மாற்றுத்திறனாளிக்கு செயற்கைக்கால் வழங்கும் ஆட்சியா் தி. சாருஸ்ரீ. 
திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Din

திருவாரூா்: திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமை வகித்தாா். கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 308 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 5 நபா்களுக்கு தலா ரூ. 8,500 வீதம் மொத்தம் ரூ.42,500 மதிப்பில் செயற்கைக்கால்களும், ஒருவருக்கு ரூ.16,100 மதிப்பில் கைப்பேசியும் என மொத்தம் 6 நபா்களுக்கு ரூ.58,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT