கோப்புப்படம்
திருவாரூர்

திருவாரூரில் ஜூன் 20-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூரில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

Din

திருவாரூா்: திருவாரூரில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்களுக்கு தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கத்தோடு இம்முகாம் நடத்தப்படுகிறது.

திருவாரூா் விளமல் ஆா்.வி.எல். நகரில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 20 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனா். தனியாா்துறை முகாமில் எட்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைநாடும் இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞா்கள், தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் பங்கேற்று பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 04366-224226 என்கிற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க, வேலைநாடும் இளைஞா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, அந்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து முகாமுக்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT