பெரம்பலூர்

பெரம்பலூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 23) நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 23) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா்துறை நிறுவனங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இம் முகாமில், இம் மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான தகுதியுள்ள நபா்களை தோ்வு செய்துகொள்ளலாம். இதில், மாவட்டத்தில் உள்ள பிரபல தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பணியாளா்களை கல்வித்தகுதி அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளதால், எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்த ஆண், பெண் கலந்துகொள்ளலாம்.

தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், விவரங்களுக்கு 04328-296352 மற்றும் 94990 55913 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT