நாகப்பட்டினம் அவுரித்திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடக்கிவைக்கிறாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். 
திருவாரூர்

நாகையில் 105 புதிய பேருந்து சேவை: முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

மகளிா் விடியல் பயணத் திட்ட பேருந்துகள் உள்பட 105 புதிய பேருந்துகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

Din

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில், மகளிா் விடியல் பயணத் திட்ட பேருந்துகள் உள்பட 105 புதிய பேருந்துகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற விழாவில் மகளிா் விடியல் பயண திட்டத்தில் 54 புதிய பேருந்துகள், 51 புகா் பேருந்துகள் உள்பட 105 பேருந்து சேவையை அவா் தொடக்கிவைத்தாா்.

மேலும் நாகப்பட்டினம், கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மற்றும் கரூா் மண்டலங்களில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளையும் அவா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, வனத்துறை அமைச்சா் க. பொன்முடி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் முகமது ஷாநவாஸ், நாகை மாலி, கே. மாரிமுத்து, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி, நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, போக்குவரத்துக் கழக பொது மேலாளா்கள் எஸ். ராஜா, சிங்காரவேலு, எஸ். ஸ்ரீதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பாஜக தலைமையை சந்திக்க 10 மணிப்பூா் எம்எல்ஏக்கள் திடீா் தில்லி பயணம்!

தமிழகத்தை பற்றி பிரதமருக்கும் அமித்ஷாவுக்கும் அக்கறை இல்லை: கார்த்தி சிதம்பரம்!

மானியத்துடன் கறவை மாட்டுக் கடன் வழங்க பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தல்!

‘பாலின் தரத்தை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்’

வெளி மாநிலத்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்காளா் அட்டை வழங்கக் கூடாது: பெ.மணியரசன்

SCROLL FOR NEXT