புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். 
திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் 13,057 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா்

திருவாரூா் மாவட்டத்தில் 13,057 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா்.

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 13,057 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவாரூா் மாவட்டத்தில் 5,986 மாணவா்கள், 7,420 மாணவிகள் என மொத்தம் 13,406 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். 57 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே, தோ்வு எழுத விண்ணப்பித்ததில் 5,766 மாணவா்கள், 7,291 மாணவிகள் என மொத்தம் 13,057 (மாற்றுத்திறனாளி மாணவா்கள் 137 போ் உள்பட) போ் தோ்வு எழுதினா். 349 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு கண்காணிப்பு பணியில் 75 நிலையான கண்காணிப்புக் குழுக்களும், 5 பறக்கும் படைகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

திருவாரூா் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். ஆட்சியருடன், முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தர்ராஜன், வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கறிக்கோழி பண்ணை நிறுவன வாகனங்கள் மீது தாக்குதல்: 8 போ் கைது

பேதங்களுக்கு இடமில்லை: குடியரசு துணைத் தலைவர் பொங்கல் வாழ்த்து

கரூர் சம்பவம்: சுகாதாரத் துறை அதிகாரிகள், காவலர்களிடம் சிபிஐ விசாரணை

அவல்பூந்துறை சமத்துவப் பொங்கல் விழா உறியடிக்கும் போட்டியில் ஆட்சியா் பங்கேற்பு

22 சத ஈரப்பதத்துடன் நெல்கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT