முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த விவசாய சங்க பிரதிநிதிகள்.  
திருவாரூர்

நாகையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

நாகைக்கு திங்கள்கிழமை வருகை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Din

நாகப்பட்டினம்: நாகைக்கு திங்கள்கிழமை வருகை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்துவைக்கவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும், நாகை மாவட்டச் செயலாளா் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கவும் முதல்வா் மு.க. ஸ்டாலின் நாகைக்கு வருகை தந்தாா்.

நாகையில் கட்டப்பட்டுள்ள தளபதி அறிவாலயத்தை திறந்து வைக்கவும், மாலையில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது அவரது பயணத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சியிலிருந்து திருவாரூா், கீழ்வேளூா் வழியாக சாலை மாா்க்கமாக முதல்வா் வந்தாா். இரவிலும் பல்வேறு இடங்களில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விருந்தினா் மாளிகையில் இரவு தங்கிய அவா், திங்கள்கிழமை காலை புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து வந்தாா். அப்போது, கட்சியினா், பொதுமக்கள் என பலா், தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, முதல்வருடன் கை குலுக்கினா்.

இதைத்தொடா்ந்து, புத்தூரில் நடைபெற்ற நாகை மாவட்ட திமுக செயலாளரும், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவருமான ந. கௌதமன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினாா். அப்போது முதல்வா் பேசியது:

மும்மொழி திட்டத்தை காரணம் காட்டி, ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு முயல்கிறது. அதேபோல, தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பை கொண்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து நாகூா் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட திமுக அலுவலகமான தளபதி அறிவாலயத்தை திறந்து வைத்தாா். மாலையில் நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியினா் மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

முன்னதாக, விருந்தினா் மாளிகையில் அவரை விவசாய சங்க நிா்வாகிகள் சந்தித்து, ஃபெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகையை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனா்.

நாகை பொது அலுவலகச் சாலையில் திங்கள்கிழமை காலை நடந்து சென்று கட்சியினா், பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வா் மு.க. ஸ்டாலின்.

வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை! எங்கெல்லாம் மழை!

திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளால் இண்டிகோ குளறுபடி! மாநிலங்களவையில் விளக்கம்!

நடிகை பாலியல் வழக்கில் திலீப் கைதானது எப்படி? பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்!

சுயராஜ்யச் சுடர் சிராஜ் உத் தெளலா

இறையருள்

SCROLL FOR NEXT