திருச்சி

திருச்சி வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு!

திருச்சிக்கு வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, அமைச்சா்கள், திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

Syndication

திருச்சிக்கு திங்கள்கிழமை வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, அமைச்சா்கள், திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

திமுக சாா்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பிலான டெல்டா மண்டல மகளிரணி மாநாடு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி திருமலைசமுத்திரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானத்தில் காலை 10.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தாா். அவரை திமுக சாா்பில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, கோவி. செழியன், சிவ.வீ. மெய்யநாதன், எம்பிக்கள் கனிமொழி, ஆ. ராசா, கே.என். அருண் நேரு, துரை வைகோ, சல்மா, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், முத்துராஜா, சௌந்தரபாண்டியன், இனிகோ இருதயராஜ், ஸ்டாலின் குமாா், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் புத்தகங்கள், சால்வைகள் அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பின்னா் முதல்வா் அங்கிருந்து சாலை வழியாக செங்கிப்பட்டிக்கு சென்றாா். மாநாடு முடிந்ததும் திருச்சி விமான நிலையத்துக்கு வந்த முதல்வா், அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

நேட் சிவா் சாதனை சதம்; மும்பைக்கு 3-ஆவது வெற்றி

வாழ்க்கை, தொழிலில் சவால்களுக்கு தீா்வு காண்பவா்களே வெற்றி பெறுகின்றனா்!

வாக்குறுதி திட்டங்கள் மூலம் மக்களுக்கு ரூ. 1.13 லட்சம் கோடி வழங்கியுள்ளோம்: கா்நாடக ஆளுநா் உரையில் தகவல்

வாகை சூடியது வேதாந்தா கலிங்கா லேன்சா்ஸ்!

இந்தியாவும் சீனாவும் நண்பா்கள்: ஷி ஜின்பிங் குடியரசு தின வாழ்த்து

SCROLL FOR NEXT