திருவாரூர்

திருவாரூா்: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-இல் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 17 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

Din

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 17 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 17 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 22 ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. 6 மாதம் முதல் 5 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கு கண்பாா்வைத் திறன், நிமோனியா காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கான எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஊட்டச்சத்துக்காகவும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது.

அனைத்து கிராமப் புறங்கள் மற்றும் நகா்ப் புறங்களில், தடுப்பு ஊசிப் பணிகள் மேற்கொள்ளப்படும் துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் இத்திரவம் வழங்கப்படவுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் 83,806 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT