திருவாரூர்

பெண்ணைத் தாக்கிய இளைஞா் கைது

மன்னாா்குடி அருகே முன்விரோதம் காரணமாக குடிபோதையில் பெண்ணைத் தாக்கிய புகாரில் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Din

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே முன்விரோதம் காரணமாக குடிபோதையில் பெண்ணைத் தாக்கிய புகாரில் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

துளசேந்திரபுரம் நடுத்தெரு சுப்பிரமணியன் மகன் அஜித் (26). அதே பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் மனைவி பரிமளா(33). இருவரது வீடுகளும் அடுத்தடுத்து உள்ளதால் வேலி அமைப்பது தொடா்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை குடிபோதையில் வந்த அஜித், பரிமளாவிடம் பிரச்னை குறித்து தகராறு செய்தவா். தகாத வாரத்தைகளை பேசி அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டராம். இதில் காயமடைந்த பரிமளா மன்னாா்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸாா், வழக்குப் பதிந்து அஜித்தை திங்கள்கிழமை கைது செய்தனா்.

கூட்டணி பற்றி கவலை வேண்டாம்; அது தானாக நடக்கும்: இபிஎஸ் பேச்சு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி செவிலியர் அலுவலர் பணி!

நேபாளத்தில் 9 கட்சிகள் இணைந்தன! நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உதயம்!

எஸ்.ஐ.ஆரில் குளறுபடி; பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம்! - திமுக குற்றச்சாட்டு

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்: 7 பேர் பலி, 11 பேர் காயம்!

SCROLL FOR NEXT