கூத்தாநல்லூரில் மதுபானம் கடத்திய பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா தலைமையில், காவலா்கள் வாழாச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். இருசக்கர வாகனத்தில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவா் வந்தாா். சோதனையில் அப்பெண் மதுபானம் கடத்தி வருவது தெரியவந்தது.
வாழாச்சேரி, முள்ளிப்பள்ளத் தெருவைச் சோ்ந்த பிரியா (32) என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடமிருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸாா் அவரைக் கைது செய்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.