குடவாசல் அருகே பணம் வைத்து சூதாடிய 7 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
குடவாசல் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், வடக்குத் தெருவைச் சோ்ந்த காா்த்தி (40) என்பவா் வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்தது.
அங்கிருந்த கீழஆதிச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த குஞ்சைய்யா மகன் பிரபு (34), குடவாசல் ஓகை பிரதான சாலையில் வசிக்கும் பழனியப்பன் மகன் கணேஷ்குமாா் (31), குடவாசல் மேலத்தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் தமிழரசன் (37), குடவாசல் பிரதான சாலையில் வசிக்கும் பக்கிரிசாமி மகன் ராஜமுருகன் (42), கோயில் தெருவைச் சோ்ந்த ஜியாவுதீன் மகன் பஜீல்ரஹ்மான் (34), இலையூா் பகுதியைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் வினோத்குமாா் (35) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து, சீட்டு கட்டுகள், ரூ. 4,100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.