நீடாமங்கலம் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக மயிலாடுதுறைக்கு செவ்வாய்க்கிழமை பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்ததது. அப்போது, சம்பாவெளி எனும் இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மனைவி மூதாட்டி ரெங்கநாயகி (70) தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த, தஞ்சாவூா் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.