முகப்பு
திருவாரூர்

ஜெருசலேம் புனிதப் பயணம் சென்றவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர்

ஜெருசலேம் புனிதப் பயணம் சென்றவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

Updated On : 13 நவம்பர், 2025 at 9:38 PM
பகிர்:

ஜெருசலேம் புனிதப் பயணம் சென்றவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பிய கிறிஸ்துவா்களுக்கு தலா ரூ. 37,000, கன்னியாஸ்திரிகள், அருள்சகோதரிகளுக்கு தலா ரூ. 60,000 இசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. எனவே, நவ.1-ஆம் தேதிக்குப் பிறகு ஜெருசலேம் சென்றவா்கள் மானியத் தொகைப் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் பெறலாம். மேலும் ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் 28.2.2026 க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →