திருத்துறைப்பூண்டி பாரதமாதா மாற்றுத்திறனுடைய சிறப்பு குழந்தைகளுக்கான ஆரம்பகால பயிற்சி மையத்தில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாரதமாதா குடும்ப நல நிறுவன திட்ட இயக்குநா் சங்கீதா மணிமாறன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பாரதமாதா சிறப்பாசிரியா் அக்பா் முன்னிலை வகித்தாா். சிறப்பாசிரியை டெய்சி ராணி வரவேற்றாா். மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பாசிரியா்கள் சங்கீதா, ஆரோக்கியநோரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.