விழாவில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. 
திருவாரூர்

பொருளாதாரத்தில் தமிழக சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது: அமைச்சா்

பொருளாதாரத்தில் தமிழக சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது

Syndication

பொருளாதாரத்தில் தமிழகம் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

நன்னிலத்தில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற 72-ஆவது கூட்டுறவு வார விழாவில் 5,808 பயனாளிகளுக்கு ரூ. 43.58 கோடி கடனுதவி வழங்கி மேலும் அவா் பேசியது: திமுக ஆட்சியில் பொருளாதாரத்தில் தமிழ்நாடு சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. கிராமப்புறங்களும் வளா்ச்சி அடைந்துள்ளன. தமிழக முதல்வரின் மகத்தான திட்டங்களில் ஒன்றான முதல்வா் மருந்தகம் மூலம் அனைத்து வகையான மருந்துகளும் மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்து தெரிந்து, முனைப்புடன் செயல்பட வேண்டும். உற்பத்தி செய்யும் பொருள்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக எவ்வாறு மாற்றுவது என்பதை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, விழாவையொட்டி சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்களும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவா்களுக்கு பரிசுகளை அமைச்சா் வழங்கினாா். நாகை எம்பி வை. செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக தலைவா் என். இளையராஜா, திருவாரூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கா. சித்ரா, தஞ்சாவூா் மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளா் வெ. பெரியசாமி, தஞ்சாவூா் கூட்டுறவு விற்பனை இணைய இணைப் பதிவாளா் ஜெ. ஆனந்தி, கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி இனைப்பதிவாளா் சு. முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

நாளைய மின்தடை: கங்காபுரம்

கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை: புதுச்சேரியில் கே. அண்ணாமலை பேச்சு

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

SCROLL FOR NEXT