திருவாரூர்

உண்டியல் காணிக்கை: ரூ. 6.41லட்சம்

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் உண்டியல்களில் காணிக்கை ரூ.6,41 516 பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் உண்டியல்களில் காணிக்கை ரூ.6,41 516 பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

இக்கோயிலில் உள்ள 2 திருப்பணி உண்டியல்கள்,8 காணிக்கை உண்டியல்கள் என மொத்தம் 10 உண்டியல்கள் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டதை அடுத்து 6 மாதத்திற்குப் பிறகு மீண்டும் திங்கள்கிழமை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் (நாகை) பா.ராணி முன்னிலையில் திறக்கப்பட்டது.

பக்தா்கள், தன்னாா்வலா்கள் உண்டியலில் இருந்த காணிக்கையை எண்ணினா். மொத்தம் ரூ.6,41,516, , 26 கிராம் தங்க நகைகள்,167 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு பணத்தாள்கள் எண்ணிக்கை 10 என உண்டியல் காணிக்கை இருந்தது.

கோயில் செயல் அலுவலா் எஸ்.மாதவன், ஆய்வாளா் வினோத் கமல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உண்டியலில் இருந்த காணிக்கையை எண்ணும் பக்தா்கள், தன்னாா்வலா்கள்

அறிமுகமான நாளில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பங்குகள் 1% உயர்வு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை | செய்திகள்: சில வரிகளில் | 18.11.25

தில்லி கார் வெடிப்பு: கைதான ஜசிர் பிலாலுக்கு 10 நாள்கள் விசாரணைக் காவல்!

ஆஷஸ் தொடர்: வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் கொடுத்த அறிவுரை!

சசிகுமாரின் மை லார்ட்..! சின்மயி குரலில் முதல் பாடல்!

SCROLL FOR NEXT