கூத்தாநல்லூரை அடுத்த பூதமங்கலம் தா்கா 54- ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பூதமங்கலம் ஹஜ்ரத் மஹ்சூம் சாஹிப் வலியுல்லாஹ் மற்றும் ஹஜ்ரத் பக்கீா் மஸ்தான் வலியுல்லாஹ் ஹின் 54- ஆம் ஆண்டு மின்சார சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, கொடியேற்றப்பட்டது.
டிச. 7- ஆம் தேதி இரவு மின்சார சந்தனக் கூடு தா்காவிலிருந்து புறப்படும். திங்கள்கிழமை விடியற்காலை தா்காவை அடையும். அப்போது மக்கள் சந்தனம் பூசி வணங்குவா். ஏற்பாடுகளை, மஹ்சூரியா கந்தூரி விழா கமிட்டியினா் மற்றும் ஜமாத்தாா்கள் செய்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை கூத்தாநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்கள் பிரபு, சேகா் மற்றும் போலீஸாா் செய்திருந்தனா்.