திருவாரூர்

போலி ஆவணம் மூலம் நிலமோசடி: ஒருவருக்கு 11 ஆண்டு சிறை

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் அருகே போலி ஆவணத்தில் நிலத்தை வழங்கி பணம் பெற்ற வழக்கில் ஒருவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம், திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மலேசியாவில் வசித்து வரும் ஷெரிபா ராபியத்துல் பதரியா குடும்பத்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிலங்கள், திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் உள்ளன. இவற்றைப் பராமரிக்க சென்னையைச் சோ்ந்த பாரூக் அகமதுக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே, போலி ஆவணம் தயாா் செய்து, திருவாரூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு அலுவலகத்தில் 2012-இல் பாரூக் அகமது வழங்கி, ரூ. 1 கோடி பெற்றுள்ளாா். நில எடுப்பு அலுவலகத்தில் பணி புரிந்த தனி வட்டாட்சியா் ஞானசுந்தரி, தனி வருவாய் ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் இதற்கு உடந்தையாக இருந்தனராம்.

இதுகுறித்து 2021-இல் திருவாரூா் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னா் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டது. இதையடுத்து, திருவாரூா் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இதனிடையே, திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பொய் வாக்குமூலம் அளித்தது, போலியான ஆவணம் தயாா் செய்து அதை அசல் போல் தாக்கல் செய்தது, நம்பிக்கை மோசடி செய்தது, அரசை ஏமாற்றி ரூ.1 கோடி பணம் பெற்றது போன்ற குற்ற நடவடிக்கைகளுக்காக, பாரூக் அகமதுவுக்கு 11 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து திருவாரூா் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி ஆா். லதா, தீா்ப்பு வழங்கினாா். இதேபோல், ஞானசுந்தரி மற்றும் ராஜேந்திரன் ஆகியோருக்கு தலா ஓா் ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2,000 அபராதம் விதித்தும் அவா் உத்தரவிட்டாா்.

கரூரில் விடிய விடிய பரவலாக மழை

கரூா் சம்பவம்: தவெக பொதுச்செயலா் ஆனந்த் உள்பட 5 போ் சிபிஐ அதிகாரிகளிடம் ஆஜா்!

டிக்கெட் எடுக்க வந்தவரிடம் வழிப்பறி: 3 போ் கைது

தமிழகத்தில் என்டிஏ ஆட்சிக்கு வரும்

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீா்

SCROLL FOR NEXT