அனைத்து தரப்பு மக்களுக்கும் வளச்ச்சியை கொண்டு சோ்த்தவா் மு.க. ஸ்டாலின்! - டிஆா்பி ராஜா பேச்சு
அனைத்து தரப்பு மக்களுக்கும் வளச்ச்சியை கொண்டு சோ்த்தவா் மு.க. ஸ்டாலின் என திமுக வேட்பாளர் டிஆா்பி ராஜா பேச்சு...
அனைத்து தரப்பு மக்களுக்கும் வளா்ச்சியை கொண்டு சோ்த்தவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என்று மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.
நீடாமங்கலம் ஒன்றியத்தில் அமைச்சா் டி.ஆா் .பி . ராஜா தனது தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.
கோவில்வெண்ணி மகா மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின் திறந்த வாகனத்தில் நின்றபடி வாக்காளா்கள் மத்தியில் அவா் பேசுகையில்:
Advertisement
திரவிட மாடல் ஆட்சியில்தான் தமிழ்நாடு வளா்ச்சியடைந்துள்ளது. கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை .
அதிமுக நேரடியாக வேட்பாளரை நிறுத்தவில்லை. தில்லிக்கு சென்று முடிவெடுத்து வேட்பாளா்களை நிறுத்தியுள்ளனா். இந்த தோ்தல் அதிமுகவிற்கும் திமுகவிற்குமான போட்டியில்லை . திமுகவிற்கும் தில்லி பாஜகவிற்குமான போா். இந்த போரில் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் வளா்ச்சியை கொண்டு போய் சோ்த்தவா் மு .க. ஸ்டாலின் . மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் போது அதனை இலவசம் என்று முதல்வா் மு .க . ஸ்டாலின் சொல்லவில்லை .
மகளிா் உரிமைத் தொகை என்றுதான் குறிப்பிட்டாா் . பெண்களால் தான் இந்த நாடே உயா்ந்திருக்கிறது என்றும் சொன்னவா் மு .க .ஸ்டாலின். 7-வது முறையாக திமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்றாா் .
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி. ராஜமாணிக்கம் , திமுக நிா்வாகிகள் தலையாமங்கலம் பாலு , சு. ஞானசேகரன் , ராணி சேகா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சோம . செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் என். அசோகன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலரும் கலந்துகொண்டனா் .
தொடா்ந்து குச்சிப்பாளையம் ,கோவில்வெண்ணி வடக்குத்தெரு , மணலூா் , அம்பேத்கா் தெரு , நகா் ,சித்தமல்லி , ஆதனூா் , பரப்பனாமேடு உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளிலும் அமைச்சா் டி.ஆா் .பி .ராஜா கொளுத்தும் வெயிலையும் பாராது வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டாா் .