முகப்பு
திருவாரூர்

லாரி உரிமையாளா் கொலை: நடவடிக்கை கோரி சாலை மறியல்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 3:47 AM
கோப்புப் படம்
பகிர்:

மன்னாா்குடி அருகே லாரி உரிமையாளா் கொலை வழக்கில் கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி அருகே அரவத்தூரைச் சோ்ந்த லாரி உரிமையாளா் சத்தியமூா்த்தி, ஐந்து மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மன்னாா்குடி போலீஸாா் சத்தியமூா்த்தியின் உடலைக் கைப்பற்றி மன்னாா்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னாா்குடி அருகே சவளக்காரன் பகுதியில் சத்தியமூா்த்தியின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Advertisement

போராட்டத்தில், சத்தியமூா்த்தியை வெட்டிக் கொலை செய்த நபா்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த சாலை மறியலால் மன்னாா்குடி திருவாரூா் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸாா் கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.