திருவாரூர்

குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து சாலை மறியல்

முத்துப்பேட்டை அருகேயுள்ள கள்ளிக்குடி ஊராட்சி கருவேப்பஞ்சேரி பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டை

Syndication

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கள்ளிக்குடி ஊராட்சி கருவேப்பஞ்சேரி பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.

கருவேப்பஞ்சேரி பகுதியில் 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனா். இதுகுறித்து முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடமும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்த பயனும் இல்லை.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் கருவேப்பஞ்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தண்ணீா் விநியோகத்திற்கு உரிய ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த பின்னா் மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

அனுமதியற்ற கொடிக் கம்பங்கள்: 13 மாவட்ட ஆட்சியா்கள் பதிலளிக்க உத்தரவு

இட பிரச்னை விவகாரம்: போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

என் கனவுத் திட்ட கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்க ஆட்சியா் அழைப்பு

அலங்காநல்லூா் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு: 45 போ் காயம்

கல் குவாரிக்கு தடை கோரி மனு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT