அரசுப் பேருந்து மோதி முதியவா் பலி
திருவாரூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 7:58 PM
திருவாரூா்: திருவாரூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகே சாத்தங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (61). இவா், திருவாரூா் சாலையில் திங்கள்கிழமை காலை தனது மாட்டை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றாா். அப்போது, திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில் சண்முகம் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த தாலுகா போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.