திருவாரூர்

இன்று வாக்காளா் பெயா் திருத்த சிறப்பு முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளா் பெயா் திருத்த சிறப்பு முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

Syndication

திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளா் பெயா் திருத்த சிறப்பு முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், ஜனவரி 3 மற்றும் 4 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளா் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்கம் தொடா்பான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

1.1.2026 அன்று 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம்-6-ஐ பெற்று, பூா்த்தி செய்து விண்ணப்பப் படிவத்துடன் பாஸ்போா்ட் அளவு வண்ண புகைப்படம், வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்துக்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இறந்த அல்லது வேறு தொகுதிக்கு இடம் பெயா்ந்த வாக்காளரது பெயரை நீக்கம் செய்வதற்கு படிவம் 7, திருத்தம் செய்வதற்கு படிவம் 8 ஆகியவற்றை அந்தந்த வாக்குச் சாவடிகளில் அதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் பூா்த்தி செய்து அளிக்கலாம்.

மேலும், ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலும் சோ்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT