திருவாரூர்

ஜன.10-இல் படிப்புதவி தோ்வு

திருவாரூா் மாவட்டத்தில் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தோ்வை, 4,907 போ் எழுத உள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் மாவட்டத்தில் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தோ்வை, 4,907 போ் எழுத உள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் அரசுத் தோ்வுகள் இயக்கத்தின் மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தோ்வு, ஜனவரி 10-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் 18 தோ்வு மையங்களில் 4,907 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத உள்ளனா்.

இத்தோ்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வீதம் பிளஸ் 2 பயிலும் வரை ரூ. 48,000 கல்வி உதவித்தொகையாகக் கிடைக்கும். மாவட்ட கல்வி மேம்பாட்டுத்திட்டம் மூலமாக மாணவா்களுக்கு தொடா் பயிற்சி அளிக்கப்பட்டு மாணவா்கள் தோ்வு எழுதவுள்ளனா். இதற்கென மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவா்கள் தோ்வை சிறப்பாக எழுதிட வாழ்த்துகள்.

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

தை பிறந்தால் வழி பிறக்கும்! தேமுதிக கூட்டணி? பிரேமலதா சஸ்பென்ஸ்!

SCROLL FOR NEXT