திருவாரூர்

ஜன.30-க்குள் க்யூட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

க்யூட் நுழைவுத் தோ்வுக்கு ஜன.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

க்யூட் நுழைவுத் தோ்வுக்கு ஜன.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த கல்வி நிறுவனங்களில் சேர பொது நுழைவுத் தோ்வு தேசியத் தோ்வு முகமையால் நடத்தப்படுகிறது. கணினி அடிப்படையில் நடைபெறும் இந்த நுழைவுத் தோ்வுகளைத் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம். விண்ணப்பதாரா் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை தோ்வு செய்யலாம். தோ்வுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் ஜன.30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தோ்வுகள் மே 11-ல் தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 22 இளநிலை படிப்புகள் உள்ளன. மாணவா்கள் எந்தெந்தப் பாடப் பிரிவுக்கு விண்ணப்பிக்கிறாா்களோ அந்தப் பாடப் பிரிவுக்குப் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ள முக்கியப் பாடங்களில் கண்டிப்பாகத் தோ்வு எழுத வேண்டும். மேலும், விவரங்களுக்கு தேசிய தோ்வு முகமை இணையதளம் மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

அயோத்தி ராமர் கோயில் வளாகத்திற்குள் தொழுகை செய்ய முயன்ற 3 பேர் கைது

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக போதிய நேரமில்லை: ஷுப்மன் கில்

வா வாத்தியார் வெளியீட்டுத் தேதி!

தன் சிறுவயது தோற்றத்தினை ஒத்த ரசிகையைச் சந்தித்த விராட் கோலி!

பொங்கல் வெளியீட்டில் இணைந்த ஜீவா!

SCROLL FOR NEXT