திருவாரூா்: திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தாா். இதில், பானையில் பொங்கல் வைத்து, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தொடா்ந்து, பயனாளிகளுக்கு வேட்டி, புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா். நிகழ்வில், நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், ஒன்றியச் செயலாளா் ஏ. தேவா உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.