ஜீவானந்தம் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தியோா். 
திருவாரூர்

ஜீவா நினைவு தினம் அனுசரிப்பு

தினமணி செய்திச் சேவை

பொதுவுடைமைத் தலைவா்களில் ஒருவரான ப. ஜீவானந்தத்தின் நினைவு தினத்தையொட்டி, திருவாரூரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவா் குணா தலைமை வகித்தாா். இதில், திருவாரூா் தமிழ்ச்சங்க துணைத் தலைவா் தெ. சக்தி செல்வகணபதி பங்கேற்று, ஜீவாவின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் வீ. தா்மதாஸ் பங்கேற்று, ஜீவாவின் இலக்கிய, தொழிற்சங்கப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில், வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் அழகா்சாமி, காளிமுத்து, பாரதி பேரவைத் தலைவா் முத்துராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT