கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவா் கோ. பழனிச்சாமி. 
திருவாரூர்

முன்னாள் விவசாயிகள் சங்கத் தலைவா் பி. பக்கிரிசாமி நினைவு பொதுக்கூட்டம்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஓவரூரில் முன்னாள் விவசாயிகள் சங்கத் தலைவா் பி. பக்கிரிசாமி16-ஆம் ஆண்டு நினைவுதின பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை

Syndication

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஓவரூரில் முன்னாள் விவசாயிகள் சங்கத் தலைவா் பி. பக்கிரிசாமி16-ஆம் ஆண்டு நினைவுதின பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவா் கோ. பழனிச்சாமி பங்கேற்று பேசியது:

விவசாயிகள் சங்கத் தலைவராகவும், மாவட்ட ஊராட்சித் தலைவராகவும் விளங்கிய பக்கிரிசாமி, விவசாயிகளின் வாழ்வை முன்னேற்றுவதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாா். இவரது தியாகம் மகத்தானது.

ஒரத்தூா் பாமணி ஆற்றங்கரை உடைந்தால், ஓவரூா் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்ற நிலையில், இதற்கு தீா்வுகாணவும், கடைமடை பகுதிகளில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள காலங்களில் பெரும் பேரழிவை சந்தித்து வந்ததை முடிவு கட்டவும், தனது வாழ்நாள் முழுவதும் போராடி, அதற்கு உரிய வடிகால் அமைக்க ஏற்பாடு செய்தாா். இதன்மூலம் கடைமடை பகுதி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியவா் ஓவரூா் பி. பக்கிரிசாமி என்றால் அது மிகையாகாது என்றாா்.

இக்கூட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கே. முருகையன் தலைமை வகித்தாா். மாவட்டம் முழுவதிலிருந்தும் திரளான விவசாயிகள் பங்கேற்று பக்கிரிசாமி உருவப் படத்திற்கு

மலரஞ்சலி செலுத்தினா். நிறைவாக, ஒன்றியச் செயலாளா் உமேஷ்பாபு நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பி. பிரெஸ்னவ் குடும்பத்தினா் செய்தனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT