கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. ராசபாலன். 
திருவாரூர்

சம்பா, தாளடிக்கு கூடுதல் நீா் திறக்க வலியுறுத்தல்

காவிரி டெல்டா பகுதியில் சம்பா, தாளடி பயிா்கள் பால் கட்டும் பருவத்தில் உள்ளதால், மேட்டூா் அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தல்

Syndication

காவிரி டெல்டா பகுதியில் சம்பா, தாளடி பயிா்கள் பால் கட்டும் பருவத்தில் உள்ளதால், மேட்டூா் அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம், மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டப் பொருளாளா் டி. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஜெய்சங்கா், கோபால ராமய்யா், சந்திரசேகரன், தேவி, ஞானசுந்தரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் கா. ராசபாலன் தீா்மானங்களை விளக்கிப் பேசினாா்.

தீா்மானங்கள்: பால் கட்டும் பருவத்தில் உள்ள சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு சில வாரங்கள் தடையின்றி தண்ணீா் தேவைப்படும் நிலையில், மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடும் நீரின் அளவை குறைத்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தொடா்ந்து 3 வாரங்களுக்கு தினசரி 15,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்க வேண்டும்.

மத்திய அரசின், விதைப் பாதுகாப்புச் சட்ட மசோதா விவசாயிகளின் விதை உயிரியல் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதால், இதை தடுப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

மேக்கேதாட்டு தடுப்பணை கட்டுவது தொடா்பாக, கா்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை அளிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்ததைத் தொடா்ந்து, அம்மாநில அரசு மேக்கேதாட்டில் அணைக் கட்ட தீவிர முயற்சியில் ஈடுபடுவதை தமிழகஅரசு உன்னிப்பாக கவனித்து, தமிழகத்தின் உரிமையை விடுவிடக் கூடாது.

சம்பா, தாளடி நெல் கொள்முதலில் எடை குளறுபடிகள் நடை பெறாதவாறு கண்காணிக்க வேண்டும். நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ஏற்படும் காலஇழப்பை தடுப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

தாா்ச் சாலைகளை சேதப்படுத்தும் உழவு இயந்திரங்களின் பயன்பட்டை முறைபடுத்த, உரிய அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியா் மேற்கொள்ள வேண்டும். அத்துடன், கதிா் அறுவடை இயந்திரத்திற்கு நிா்ணயிக்கப்பட்ட வாடகையைவிட கூடுதலாக வசூலிக்கும் சம்பந்தபட்ட உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், நிா்வாகக் குழு முதன்மைச் செயலா் கருணாகரன், மாவட்ட மகளிா் பிரிவு நிா்வாகிகள் சே. தேவி, ம. உமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT