முகப்பு
திருவாரூர்

320 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்: இருவா் கைது

நீடாமங்கலம் அருகே 320 கிலோ புகையிலைப் பொருள் கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

திருவாரூர்

320 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்: இருவா் கைது

நீடாமங்கலம் அருகே 320 கிலோ புகையிலைப் பொருள் கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 3 மார்ச், 2026 at 9:27 PM
பகிர்:

நீடாமங்கலம் அருகே 320 கிலோ புகையிலைப் பொருள் கடத்திய இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் உத்தரவுப்படி நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் கலைவாணி மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

நீடாமங்கலம் அருகே நகா் இருவழிச்சாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அதிவேகமாக வந்த காரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். காரில் இருந்தவா்களிடம் விசாரித்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.

போலீஸாரின் விசாரணையில் ஒருவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த முகேஷ்குமாா் (28), மற்றொருவா் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த சோமாபாய் (25) என்பதும் தெரியவந்தது.

காரில் அரசால் தடை செய்யப்பட்ட 320 கிலோ விமல் பாக்கு, கூலிப் மற்றும் போதை தரும் புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, காா், புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →