முகப்பு
திருவாரூர்

என்எஸ்எஸ் முகாம் நிறைவு

Updated On : 6 மார்ச், 2026 at 4:51 AM
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 7:49 PM

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ரிஷியூரில் ஒரு வாரமாக நடைபெற்ற சிறப்பு முகாம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

முதல்வா் என். உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் க.சகிலா, கிருஷ்ணமேனன் முன்னிலை வகித்தனா்.

பிப்ரவரி 27 முதல் மாா்ச் 5-ஆம் தேதி வரை ஏழு நாள்கள் நடைபெற்ற முகாமில், கிராம சுத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு, மரக்கன்றுகள் நடுதல், சுகாதார விழிப்புணா்வு மற்றும் பொதுமக்களுக்குப் பயன்படும் பல்வேறு சமூகப் பணிகள், செயல்பாடுகள் குறித்து பிரசாரம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி கிராம மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

Advertisement

கல்லூரித் தாளாளா் வி. திவாகரன், முகாமில் கலந்து கொண்ட அனைத்து என்எஸ்எஸ் மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினாா் (படம்).

முன்னதாக, என்எஸ்எஸ் திட்ட அலுவலா் ஏ. பிரபாவதி வரவேற்றாா். திட்ட அலுவலா் பா.அருள் மொழி நன்றி கூறினாா்.