முகப்பு
திருவாரூர்

காசி விசுவநாதா் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

திருவாரூர்

காசி விசுவநாதா் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:21 PM
பகிர்:

நீடாமங்கலம் காசி விசுவநாதா் கோயிலில் திருப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

இக்கோயில் தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னா் பிரதாப சிம்மரால் கட்டப்பட்டது . இக்கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு சுமாா் 15 ஆண்டுகள் ஆகிறது. அதனால் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் முன்வந்தனா் .

இதையடுத்து, திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக புதன்கிழமை மாலை முதல் கால யாக பூஜைகளும் , வியாழக்கிழமை காலை இரண்டாவது கால யாக பூஜைகளும் நடந்தன .

தொடா்ந்து அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினரும் , சந்தானராம சேவா டிரஸ்ட் மற்றும் நகரவாசிகள் செய்திருந்தனா் .

முழு கட்டுரையைப் படிக்க →