முகப்பு
புதுதில்லி

லஞ்சம்: வர்த்தகத் துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை

நிறுவனப் பதிவுக்குக் கையூட்டு பெற்ற வழக்கில் மத்திய வர்த்தக  அமைச்சகத்தின் மூன்று அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

நிறுவனப் பதிவுக்குக் கையூட்டு பெற்ற வழக்கில் மத்திய வர்த்தக  அமைச்சகத்தின் மூன்று அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மத்திய வர்த்தக அமைச்சகத்தில் இணை ஆணையர் மன்மோகன் துபே, பிரிவு அலுவலர் ரோஷன் லால், உதவியாளர் ஜே.எம். நய்யார் ஆகியோர் தனியார் நிறுவன உரிமையாளர் அருண்குமார் சர்மாவிடம் ரூ.12 ஆயிரம் கையூட்டு கேட்டுப் பெற்றுள்ளனர்.

இது குறித்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கன்வல்ஜித் அரோரா கையூட்ட பெற்ற மத்திய வர்த்தகத் துறை அதிகாரிகள் மூன்று பேருக்கும் வெள்ளிக்கிழமை தலா 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 எனினும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவதற்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →