தெற்கு தில்லி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் சீருடையில் குளறுபடி
தெற்கு தில்லி மாநகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மாநகராட்சி வழங்கிய சீருடையில் பல குளறுபடிகள் உள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தெற்கு தில்லி மாநகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மாநகராட்சி வழங்கிய சீருடையில் பல குளறுபடிகள் உள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:
தெற்கு தில்லி மாநகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் புதன்கிழமை சீருடை வழங்கப்பட்டது. இந்தச் சீருடையில் ஆங்கிலத்தில் தெற்கு தில்லி மாநகராட்சி எனக் குறிக்கும் வகையில் "நஈஙஇ' எனச் சரியாக அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், ஹிந்தியில் தெற்கு தில்லி மாநகராட்சி என்பதற்குப் பதிலாக "புது தில்லி முனிசிபல் கவுன்சில்' எனத் தவறாக அச்சாகியுள்ளது. அதைவிட, சீருடையில் தெற்கு தில்லி மாநகராட்சியின் சின்னத்துக்குப் பதிலாக வடக்கு தில்லி மாநகராட்சியின் சின்னம் அச்சாகியுள்ளது. இதனால், மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
இது குறித்து தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் கமல்ஜீத் ஷெராவத் அதிர்ச்சி வெளியிட்டுள்ளதுடன் உடனடி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "துப்புரவுத் தொழிலாளர்களின் சீருடையில் ஏற்பட்ட தவறுகள் தொடர்பாக மேயரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இது தொடர்பாக உரிய விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்' என்றனர்.