முகப்பு
புதுதில்லி

டியுஎஸ்யு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க (டியுஎஸ்யு) தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க (டியுஎஸ்யு) தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தில்லி பல்கலைக்கழகப் பதிவாளர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2017-2018-ஆம் ஆண்டுக்கான தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் அதிகாரியாக
பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் ராஜீவ் குப்தா,  தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப் புலத்தின் பேராசிரியர் முனைவர் பிங்கி சர்மா, கூடுதல் தேர்தல் நடத்தும் அதிகாரியாக வணிகவியல் துறை முனைவர் அபா சுக்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டியுஎஸ்யு புரவலர் என்ற முறையில் இவர்களை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  யோகேஷ்  தியாகி நியமித்துள்ளார்.  
தில்லிப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் அரசியலமைப்பு விதிகளின்படி சங்கத்தின் நிர்வாகக் குழுக்கான 11 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →