புதுதில்லி

4-வது நாளாக நீடித்த அடர் பனிப்புகை மூட்டம்!

DIN

தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் அடர் பனிப்புகை மூட்டம் நீடித்தது.
இதுகுறித்து தில்லி வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், 'வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் நகரில் காண்புதிறன் 1000 மீட்டராக இருந்தது. ஆனால், காலை 8.30 மணியளவில் இது 400 மீட்டராகக் குறைந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை இந்த சீசன் சராசரியை விட ஒரு புள்ளி குறைந்து 13 டிகிரி செல்சியஸாக பதிவானது. காலை 8.30 மணி நிலவரப்படி காற்றில் ஈரப்பதம் 93 சதவீதமாக இருந்தது' என்றார்.
காற்று மாசு: தில்லியில் சில நாள்களாகவே தொடர்ந்து அடர்ந்த பனிப்புகை மூட்டம் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை தில்லி அரசு வரும் நவம்பர் 13 முதல் 17-ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் (சிபிசிபி) மூலம் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரத் தகவலின்படி தலைநகரில் காற்று மாசு கடுமையான பிரிவில் தொடர்ந்து இருந்து வருவதும், பிஎம் 2.5, பிஎம் 10 ஆகிய நுண்நுகள்கள் காற்றில் கடுமையான அளவில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதேபோன்று, தில்லியின் காற்றின் தரக் குறியீடும் 480 என்ற அளவில் உள்ளது. இது கடுமையான நிலையைவிட அதிகமாகும். மாசுக் கண்காணிப்பு நிலையங்களில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் காற்று மாசு அளவில் 473 யூனிட்டுகளாக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT