புதுதில்லி

திட்டம் தேவையானதே: ஆம் ஆத்மி

DIN

தில்லியின் காற்று மாசுவைக் குறைக்க தில்லி அரசால் மீண்டும் அறிவித்துள்ள வாகனக் கட்டுப்பாடு திட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தில்லியில் வாகனங்களால்தான் அதிகமாசு ஏற்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இதனால் வாகனக் கட்டுப்பாடு திட்டம் தேவையானதே என்று அக்கட்சி உறுதிபட கூறியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான கோபால் ராய் கூறுகையில், 'கட்டுமான நடவடிக்கைகள், சாலை புழுதி ஆகியவற்றால் பி.எம். 10 வகை மாசு ஏற்படுகிறது.
ஆனால் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையினால் ஏற்படும் பி.எம். 2.5 வகை மாசு நுழையீரல், மூச்சுத்திணறல் பிரச்னைகளை ஏற்படுத்தும். வாகன கட்டுப்பாடு திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே பெரும் வெற்றியாகும்.
இதன் மூலம் பி.எம்.
2.5 வகை மாசுவை குறைக்கலாம். காற்று மாசுவை குறைக்க மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த மத்திய அரசு கவுன்சில் ஒன்றை உருவாக்க வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT