பயணிகள் ரயிலில் பெண் சடலம்
கிரேட்டர் நொய்டாவில் பயணிகள் ரயிலில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
கிரேட்டர் நொய்டாவில் பயணிகள் ரயிலில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கிரேட்டர் நொய்டா மாவட்டம், டான்கௌர் ரயில் நிலைய பொறுப்பு அதிகாரி ஃப்மூத் அலி புந்திர் வியாழக்கிழமை கூறியதாவது: அந்தப் பயணிகள் ரயில் டான்கெளர் ரயில் நிலையத்துக்கு வந்ததும், பெண் சடலம் ஒன்று ரயிலில் இருப்பதாக சகப் பயணிகள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸார் சென்று சடலத்தை மீட்டனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரிய வரவில்லை. அவரது சடலத்தை போலீஸார் கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், அவரை அடையாளம் காணும் நோக்கில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றார் அவர்.