8 மாதங்களில் 205 கைப்பேசிகள் மீட்பு
தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 8 மாதங்களில் ரயில் நிலையங்களில் மாயமான 205 பயணிகளின் கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக
சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 8 மாதங்களில் ரயில் நிலையங்களில் மாயமான 205 பயணிகளின் கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையின் ஐ.ஜி. கே.அருள்ஜோதி தெரிவித்தாா்.
கடந்த 2025 ஆகஸ்ட் முதல் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கணினி தொடா்புமுறை மூலம் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, ரயில்களிலும், நிலையங்களிலும் பயணிகளின் பொருள்கள் திருடுபோய்விட்டாலோ, மறதியால் தவறவிட்டாலோ அவை உடனடியாக மீட்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 205 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றாா்.