முகப்பு
புதுதில்லி

தூய்மையை வலியுறுத்தி இன்று யமுனையில் ஆரத்தி விழா

தூய்மையை வலியுறுத்தும் யமுனைஆரத்தி விழா  "குதேஷியா காட்-இல் சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

புதுதில்லி

தூய்மையை வலியுறுத்தி இன்று யமுனையில் ஆரத்தி விழா

தூய்மையை வலியுறுத்தும் யமுனைஆரத்தி விழா  "குதேஷியா காட்-இல் சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

தூய்மையை வலியுறுத்தும் யமுனைஆரத்தி விழா  "குதேஷியா காட்-இல் சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
யமுனை ஆரத்தி விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள ஸ்ரீ யமுனா  மகா சபாவின் சுலேக் அகர்வால் இதுபற்றி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
யமுனையின் தூய்மையை வலியுறுத்தியும்,  யமுனையைத் தூய்மையாக வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் கஷ்மீரி கேட் ஐஸ்பிடி பேருந்து நிலையம் அருகில் உள்ள குதேஷியா காட் பகுதியில் உள்ள யமுனை நதிக்கரையில்  யமுனை ஆரத்தி விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த விழாவுக்கு  கிழக்கு தில்லி மக்களவை உறுப்பினரும்,  தில்லி பாஜக செயலாளருமான மகேஷ் கிரி தலைமை வகிப்பார்.  இதில் முக்கிய விருந்தினர்களாக தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பாய்ஜால்,  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்பால் சிங், மனோஜ் திவாரி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்
ஹர்ஷ் வர்தன்,  தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, வடக்கு தில்லி மேயர் பிரீத்தி அகர்வால் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்' என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →