ரோஹிணி மகிளா சேவா சமிதி சார்பில் பொருள்கள் சேகரிப்பு முகாம்
தில்லியில் ரோஹிணி மகிளா சேவா சமிதி சார்பில் ஏழைகளுக்கு உதவிடும் வகையில் ஆடை, உணவுப் பொருள், வீட்டு உபயோகப் பொருள்கள் சேகரிப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
தில்லியில் ரோஹிணி மகிளா சேவா சமிதி சார்பில் ஏழைகளுக்கு உதவிடும் வகையில் ஆடை, உணவுப் பொருள், வீட்டு உபயோகப் பொருள்கள் சேகரிப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
ரோஹிணி மகிளா சேவா சமிதி சார்பில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு பொருளாதார, மருத்துவ ரீதியாக உதவும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், "கூஞ்ச்' எனும் சமூக சேவை மையத்துடன் இணைந்து ரோஹிணி மகிளா சேவா சமிதியைச் சேர்ந்த பெண்கள், நல உதவிப் பொருள்களை சேகரிக்கும் தன்னார்வப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வின்போது ஆடைகள், உணவுப் பொருள்கள், புத்தகங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டதாக ரோஹிணி மகிளா சேவை சமிதியினர் தெரிவித்தனர்.