முகப்பு
புதுதில்லி

வடக்கு தில்லி மேயர் பதவி விலகக் கோரி ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

ஊழல் விவகாரத்தில் வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ப்ரீத்தி அகர்வால் பதவி விலகக் கோரி திமார்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே ஆம்ஆத்மி கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

ஊழல் விவகாரத்தில் வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ப்ரீத்தி அகர்வால் பதவி விலகக் கோரி திமார்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே ஆம்ஆத்மி கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு மேயர் ப்ரீத்தி அகர்வால் பதவி விலகக் கோரும் பதாகைகளை ஏந்தி, முழக்கங்கள் எழுப்பினர். 
இந்நிகழ்வில் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் திலீப் பாண்டே பேசுகையில், "வடக்கு தில்லி மாநகராட்சி மேயராக இருந்து கொண்டு, ஒப்பந்தப்புள்ளிகளில் கமிஷன் பெற்று கொண்டு ஊழல் செய்து வருகிறார். இது தொடர்பாக தில்லி பாஜக தலைவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கமால் அமைதி காத்து வருகின்றனர். ஒப்பந்தப்புள்ளிகளில் பெறப்பட்ட கமிஷன் தொகையில் கட்சியின் பங்கு தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 
ஆம் ஆத்மி அமைச்சர்கள் தொடர்புடைய 400 கோப்புகளை துணைநிலை ஆளுநர் கேட்டதாக எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றில் எவ்வித ஊழலும் கண்டறியப்படவில்லை. ஆனால், பாஜக ஆளும் மாநகராட்சிகளில் டெண்டர்கள் விட்டதில் கமிஷன் தொகை பெறப்படுவது தொடர்பான விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் அலுவலகம் தொடங்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விசாரணை அமைப்புகள் அனைத்தும் கண்களை முடிக் கொண்டுள்ளன' என்றார்.
வடக்கு தில்லி மாநகராட்சி எதிர்க் கட்சித் தலைவர் ராகேஷ் குமார் பேசுகையில், "மேயருக்கு கீழ் இயங்கும் கண்காணிப்புத்துறை எப்படி ஊழல் புகாரை நியாயமாக விசாரிக்கும்? எனவே, வடக்கு தில்லி மாநகராட்சி டெண்டர்களில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்றார். 
தெற்கு தில்லி மாநகராட்சி எதிர்க் கட்சித் தலைவர் ரமேஷ் மாட்டியாலா பேசுகையில், "கடந்த முறை பாஜக கவுன்சிலர்களாக இருந்தவர்களைவிட தற்போதுள்ள பாஜக கவுன்சிலர்கள் ஊழல் பணத்தை பங்கிட்டு கொள்வதில் வேகம் காட்டுகின்றனர். மக்களின் வரிப்பணம் கமிஷன் என்ற பெயரில் பாஜகவினரால் கொள்ளையடிக்கப்படுகிறது' என்றார்.
கிழக்கு தில்லி மாநகராட்சி எதிர்க் கட்சித் தலைவர் அப்துல் ரகுமான் பேசுகையில், "வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ப்ரீத்தி அகர்வாலுக்கு எதிராக டெண்டர் கமிஷன் புகார் மட்டுமல்லாது, பிற ஊழல் புகார்களும் உள்ளன. எனவே, அவர் தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், பாஜக அவரை பதவி விலக வலியுறுத்த வேண்டும். பதவி விலகாத வரை ஊழல் தொடர்பான உண்மைகள் வெளிவராது' என்றார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →