ஈரான் எங்களிடம் ராணுவ உதவி கேட்கவில்லை! - ரஷிய அரசு அறிவிப்பு!
ஈரான் அரசு தங்களிடம் ராணுவ உதவிகளைக் கேட்கவில்லை என ரஷியா அறிவித்துள்ளது குறித்து...
ஈரான் தங்களிடம் எந்தவொரு ராணுவ உதவியையும் கேட்கவில்லை என ரஷிய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களில் இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் இஸ்ரேலின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கு நீண்டகால கூட்டாளியான ஈரான் தங்களிடம் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கேட்கவில்லை என வியாழக்கிழமை (மார்ச் 5) ரஷிய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The Russian government has announced that Iran has not asked them for any military assistance.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.