FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதிய ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்: அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்!

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் புதிய ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

21 செப்டம்பர் 2026, 1:04 pm IST
"ஒரு தியாகி போர்க்களத்தை வழிநடத்துகிறார்" என்ற அரபு மொழி வாசகத்துடன் ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஒரு ஈரானிய வீரருக்குப் பின்னால் நிற்பது போல சித்திரிக்கும் விளம்பரப் பலகை ஒன்று, பாக்த்தாத் நகரில் உள்ள ஒரு சாலையோரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பகிர்:

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும், புதிய ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே 7 மாதங்களாகப் போர் நீடித்து வரும் நிலையில், இரு தரப்பும் முழு வீச்சிலான போருக்கு மீண்டும் திரும்பத் தயாராக இல்லாத சூழல் நிலவுகிறது.

ஈரான் புரட்சிகரக் காவல் படையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், எங்களைப் பாதுகாப்பதிலும் பதில் தாக்குதலிலும் நிச்சயமாகக் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும்.

Advertisement

Advertisement

உலகமே ஆச்சரியப்படும் வகையில், போர்க்களத்தில் புதிய திறன்களைக் கொண்ட புதிய ஆயுதங்களை நாங்கள் அறிமுகப்படுத்துவோம்.

எங்களின் முந்தைய இலக்குகளைப் போல அல்லாமல், புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம். ஒரு நீண்டகாலப் போருக்கு தயாராக நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீது புதிய நடவடிக்கைகள் எடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் ஈரான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் மோதல் தீவிரமடைந்த நிலையில், சமீப நாள்களில் தாக்குதல்கள் குறைந்துள்ளது. ஆனால், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரு நாடுகளும் ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிட்டுள்ளனர்.

இந்தப் போர் ஏமனுக்கும் பரவியுள்ளது. ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி படையினர், சவூதி ஆதரவு அரசிடமிருந்து மேலும் பல பகுதிகளைக் கைப்பற்றியதோடு, சவுதி தலைநகரான ரியாத் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

summary

Iran has also warned that it will use new weapons if the United States continues to attack it.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments