FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அமெரிக்கா எங்கள் பகுதிக்குக் காவலராக இருக்கத் தேவையில்லை: ஈரான் அதிபர்

மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராக இருக்கத் தேவையில்லை என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

12 செப்டம்பர் 2026, 4:52 pm IST
ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் - AP
பகிர்:

மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராக இருக்கத் தேவையில்லை என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசிய ஈரான் அதிபர் பெசெஷ்கியன் இன்று மலேசியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Advertisement

Advertisement

அப்போது பேசுகையில், “ஈரான் மற்றும் அதன் பிராந்திய நாடுகளின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை, அங்குள்ள முக்கிய சக்திகளும் பிராந்தியத்தின் அங்கமாக உள்ள நாடுகளும் மட்டுமே உறுதி செய்ய முடியும்.

எங்களின் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயல்படத் தேவையில்லை.

எங்கள் மக்கள் பல்வேறு அநீதிகளைச் சந்தித்தபோதிலும் நாங்கள் போர் தொடர்வதை எப்போதும் விரும்பவில்லை. அமைதிக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிப்ரவரி 28 முதல் இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஈரானும் அமெரிக்காவுக்கு பதிலடியாக அமெரிக்க ஆதரவு நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி ஹோர்முஸ் நீரிணையை மூடியது.

உலகின் முக்கிய எரிபொருள் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் மூடப்பட்டதால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதனைத் திறக்க வைக்கும் முயற்சிகளை எடுக்கும் அதேவேளையில் கைப்பற்றும் முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

மேலும், சில வாரங்களுக்கு முன் நிறுத்தப் பட்டிருந்த போர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் இந்த போரால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரம் மட்டுமே கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Iran's President Masoud Pezeshkian said that the Middle East does not need the United States to be a regional policeman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments