பொருளாதாரத் தடையால் அமெரிக்கா எதையும் சாதிக்க முடியாது: ஈரான்
புதிதாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா எதையும் சாதிக்கப் போவதில்லை என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
புதிதாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா எதையும் சாதிக்கப் போவதில்லை என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
ஈரான் பொருளாதாரத்தை முடக்குவதற்கு அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
1979 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் பல ஆண்டுகளாக ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்துள்ள ஈரான் தலைவர்கள் தற்போதைய அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளின் தாக்கத்தை நிராகரித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாகப் பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், “பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் மூலமாக பிரச்னைகளைத் தீர்ப்பதே எங்களின் கொள்கை. அதேநேரம், இதுவரை நாங்கள் பிரச்னைகளில் உறுதியாக இருந்தது போன்று, இனிவரும் பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராகவும் உறுதியாக நிற்போம்.
போரின் மூலம் எதையும் சாதிக்க முடியாததைப் போன்று தற்போதைய பொருளாதாரத் தடை நடவடிக்கைகளாலும் அமெரிக்காவால் எதையும் சாதிக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதிலும், அதன் மீதான கட்டுப்பாடு தொடர்பாகவும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவுவதால் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன.
Iranian President Masoud Beseshkian has said that the US is not going to achieve anything with the newly imposed economic sanctions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.