முகப்பு
தமிழ்நாடு

அனைத்தும் முடிந்துவிட்டது - ஆல் ஃபினிஷ்! ஸ்டாலின் கலகல பேச்சு!

முதல்வர் ஸ்டாலினின் செய்கை இணையத்தில் வைரல்.

Updated On : 5 மார்ச், 2026 at 3:54 PM
முதல்வர் ஸ்டாலினின் செய்கை இணையத்தில் வைரல். - படம்: எக்ஸ்
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 3:33 PM

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு நேற்று(மார்ச் 5) உறுதி செய்யப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் காரில் ஏறும்போது அனைத்தும் முடிந்துவிட்டது - ஆல் ஃபினிஷ் என்ற தொனியில் காட்டிய செய்கை சமூக ஊடகங்களில் வைரலானது.

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத் திருமண நிகழ்வில் கலகலப்பாக பேசியுள்ளார்.

Updated On : 5 மார்ச், 2026 at 3:45 PM

திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், இன்று (மார்ச் 5) தஞ்சாவூரில் நடைபெற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்று பேசியதாவது:

Advertisement

”நேற்று(மார்ச் 4) இரவு வரை, கூட்டணிக் கட்சியோடு பேசி, ஒரு ஒப்பந்தத்தை முடித்து விட்டுத்தான், அதுவும் வெற்றிகரமாக முடித்து விட்டுத்தான், அனைவரும் பாராட்டும் வகையில் முடித்து விட்டுத்தான், இன்றைக்கு நீங்கள் எல்லாம் வாட்ஸ் ஆப்பில், சமூக ஊடகங்களில் பார்த்திருக்கலாம்.

அந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டு, காரில் ஏறுகிறபோது, கையை எடுத்து, “ஓவர்” என்ற அந்த ஆக்சனோடு காரில் ஏறிய காட்சியைப் பார்த்திருப்பீர்கள்.

அது நான் திட்டமிட்டு செய்ததல்ல. காரில் ஏற வருகிறபோது, அங்கே எதிரில் நின்று கொண்டிருந்த பத்திரிகை நண்பர்கள் எல்லாம் என்னைப் பார்த்து, “முடிந்துவிட்டதா? முடிந்துவிட்டதா?” என்று கேட்டார்கள். “முடிந்துவிட்டது” என்று சொன்னேன், அவ்வளவுதான்.

அது இன்றைக்கு பெரிய வைரலாகி, ‘அனைத்தும் முடிந்துவிட்டது - ஆல் ஃபினிஷ்’ என்று போட்ட மாதிரி, இன்றைக்கு அந்தக் காட்சிகள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே அந்த மகிழ்ச்சியோடுதான் வந்திருக்கிறேன்.

அதுமட்டுமல்ல, இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு, மாநிலங்களவை வேட்பாளராக நாம் இருவரை நாம் அறிவித்திருக்கிறோம். கூட்டணிக் கட்சிகளுக்கு இரண்டு இடங்களைக் கொடுத்திருக்கிறோம்” என்றார்.

summary

The DMK-Congress seat sharing was confirmed yesterday (March 5), and the gesture of Chief Minister Stalin, who got into the car and said, "It's all over - all finished," went viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.