புதுதில்லி

நொய்டா தொழிற்சாலையில் தீ விபத்து

DIN

நொய்டா செக்டார் 9-இல் உள்ள மரச்சாமான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிற்சாலை முழுவதும் எரிந்த நாசமானது. இதில் பல லட்சம் ரூபாய்
மதிப்பிலான தொழிற்சாலை இயந்திரங்கள், மரச் சாமான்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து நொய்டா தீ யணைப்பு நிலைய தலைமை அதிகாரி அருண் குமார் கூறுகையில், "நொய்டா செக்டார் 9-இல் உள்ள மரச்சாமான் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட ஊழியர்கள் தொழிற்சாலையை விட்டு அவசரமாக வெளியேறினர்.
தீயணைப்புத் துறைக்கு கிடைத்த தகவலின்பேரில், 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று 10 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த்த தொழிற்சாலை 3 மாடிகளில் படர்ந்து இருந்ததாலும், முழுவதும் மரச் சாமானங்கள் இருந்ததாலும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT